பெரும்பாலும் மழை காலத்தில்  வாகன ஓட்டிகள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கன மழையும், அதன் விளைவாக சாலைகளில் ஏற்படும் வெள்ளமும் காரின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அத்துடன் பருவ மழை காலத்தில் காரின் மைலேஜ் (Mileage) குறைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

இதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது மழைக்காலத்தின் போது மென்மையாக திராட்டில் செய்தால், காரின் மைலேஜ் அதிகரிக்கும். காரில் ஏசி பயன்படுத்துவதை தவிர்த்து விட்டால் அதிக மைலேஜ் கிடைக்கும். கார் டயரில் பிரஷர் சரியாக இருக்க வேண்டும். கியர் மாற்றும் முறை மைலேஜிலும் பிரதிபலிக்கும். அதனால், முடிந்த வரை அதிகபட்ச கியருக்கு சென்றால் மைலேஜ் கிடைக்கும். நிறுத்தி வைக்கப்பட்ட காரை ஐடிலில் வைப்பதை தவிர்த்திடுங்கள்