ஒவ்வொருவருக்கும் தங்களுடைய திருமணத்தை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று திருமணம் குறித்து ஏராளமான கனவுகள் இருக்கும் . அப்படி ஒரு பெண் தன்னுடைய திருமணத்தை தன்னுடைய அலுவலகத்தின் பாத்ரூமில் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆசைக்கு சம்மதம்  தெரிவித்து அவருடைய வருங்கால கணவர் குளியல் அறையில் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். இதனையடுத்து குளியல் அறையில் இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்துள்ளனர்.

HOP ஷாப்ஸ்  என்ற அந்த கடையின் குளியலறையில் அந்த பெண்ணிற்கு  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்ட பலகையில் அசௌகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்ற வாசகமும் எழுதி வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் கோட் சூட் மணப்பெண் ஆடை அணிந்து தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்வது போல குளியல் அறையில் மோதிரம் மாற்றி  திருமணம் செய்து கொண்டுள்ளனர். வித்தியாசமா நடந்த இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய லைக்குகளை குவித்து வருகிறது.