அமெரிக்காவில் இருக்கும் பால்டிமோர் என்ற நகரத்தில் காலியாக இருக்கும் வீடுகளை வெறும் ஒரே டாலருக்கு விற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது .அதாவது பால்டிமோர் நகர கவுன்சில் வழங்கியுள்ளது. இந்திய ரூபாயில் 84 ரூபாய். இந்த காலி வீடுகளை வாங்குபவர்கள் அந்த வீட்டை தாங்களே புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற கண்டிஷனும் கூறப்பட்டுள்ளது.

வீட்டை வாங்கி ஒரு வருடத்திற்கு புதுப்பித்து குறைந்தது 5 ஆண்டுக்காவது அங்கேயே இருக்க வேண்டும் எனவும் இந்த வீட்டை புதுப்பிக்க குறைந்தது 90 ஆயிரம் டாலர் செலவாகும் எனவும் கூறப்படுகிறது. அதாவது காலியாக இருக்கும் வீடுகளை காலி என்ற நிலையில் இருந்து மாற்றும் முன்னெடுப்பாக இதனை பாலடிமோர் குழுவினர் பார்ப்பதாக கூறியுள்ளனர்.