மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சாலையோரத்தில் காரப்பொறி விற்றுக் கொண்டிருந்த தீபக் குமார் என்ற வியாபாரியிடம் திடீரென நின்று உணவை வாங்கிச் சாப்பிட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மோடி அந்த வியாபாரியுடன் சுமார் 10 நிமிடங்கள் உரையாடியதுடன், அந்த உணவின் சுவையைப் பாராட்டி அதற்குரிய பணத்தையும் வழங்கினார்.

மேலும் பிரதமரே நேரில் வந்து ஜால்முரி சாப்பிட்டது அந்த வியாபாரிக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த தீபக் குமார், தனது வாழ்வாதாரம் மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by ABP News (@abpnewstv)

“>

இதனால் தான் ஒரு நாளைக்குச் சுமார் 400 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிப்பதாகத் தெரிவித்த அவர், நாட்டின் பிரதமரே தனது கடைக்கு வந்து ஜால்முரி சாப்பிட்டது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று பெருமிதத்துடன் கூறினார். இந்தச் சாதாரண மனிதரின் உழைப்பைக் கௌரவிக்கும் விதமாக அமைந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.