உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் குமார் மாரடைப்பால் காலமானார். முதல்கட்ட மக்களவைத் தேர்தலில், மொரதாபாத் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. அங்கு பாஜக சார்பில் சர்வேஷ் போட்டியிட்டார். இன்று திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறியது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது