தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாகவும் அந்த கூட்டணியில் இணைந்து போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே சுமுகமான உறவு இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் இடைவெளி சிக்கல் இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
இதன் காரணமாக ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடியை சந்திக்க ஓ பன்னீர் செல்வத்திற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே விரிசல் இருப்பதால் பாஜக இந்த பிரச்சனையில் தலையிட விரும்பாததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் பாஜக இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆபத்தானது என தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி ஆபத்தானது.
அது தமிழ்நாட்டு மக்களுக்கு நிச்சயம் நன்மை பயக்காது. அதோடு தன்னை மதிக்காத தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலக வேண்டும் எனவும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே தான் போட்டி என கூறியுள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ பன்னீர்செல்வம் விஜயுடன் இணைந்து தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
