வியட்நாம் நாட்டில், பார்ப்போரின் கண்களைக் குளமாக்கும் வகையில் ஒரு வயதுக் குழந்தை செய்த பாசப் போராட்டம் மற்றும் அதற்குப் பரிசாகத் தாத்தா எடுத்த நெகிழ்ச்சியான முடிவு குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், வயதான தாத்தா ஒருவர் வீட்டின் வாசலுக்கு வெளியே எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். இதைப் பார்த்த அவரது ஒரு வயதுப் பேரக் குழந்தை, தனக்குச் சரியாக நடக்கக் கூடத் தெரியாத நிலையிலும், தத்தி தத்தித் தள்ளாடும் கால்களுடன் ஓடிச் சென்றுள்ளது. தன் முழு பலத்தையும் திரட்டி, கீழே விழுந்து கிடந்த தாத்தாவை கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்ற அந்தப் பிஞ்சு குழந்தை முயன்றுள்ளது.
في فيتنام: اللحظه عندما لم يتردد الطفل بعمر سنة في مساعدة جده عندما سقط خارج المنزل
الصغير بالكاد يمشي بخطوات غير ثابته ومع ذلك بذل كل جهده حتى وصل اليه وحاول سحبه، لهذا السبب سيقوم الجد بتوريثه كل املاكه من مستندات واراضي pic.twitter.com/zhFG7SRPid
— Saif (@diol2n) June 28, 2026
தன்னைக் காப்பாற்ற ஒரு வயதுக் குழந்தை காட்டிய அந்தத் தூய்மையான அன்பும் அக்கறையும் அந்தத் தாத்தாவின் இதயத்தையே உருக வைத்துள்ளது. தன் ஆபத்துக் காலத்தில் ஓடிவந்த அந்தப் பேரக் குழந்தையின் பாசத்தை மெச்சிய தாத்தா, தன் பெயரில் உள்ள அனைத்து நிலங்கள், சொத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் அந்த ஒரு வயதுப் பேரனின் பெயரிலேயே எழுதி வைக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த நெஞ்சை நனைக்கும் உண்மைச் சம்பவத்தின் வீடியோ, தற்போது இணையவாசிகளிடையே மிகப்பெரிய அளவில் லைக்குகளையும் நெகிழ்ச்சியான கருத்துக்களையும் குவித்து வருகிறது.
