பாஜகவை தோற்கடிக்க வேண்டியது இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளின் கடமை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஆட்சியில் மகளிர் உரிமை மட்டும் இன்றி அனைத்து மக்களின் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது என்று மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதுமட்டுமல்லாமல் பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் நமக்கிடையே ஆன சிறிய வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றால் நம்மால் நிச்சயம் இந்திய மக்களுக்கு எதிரான சக்தியான பாஜகவை வீழ்த்த முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.