கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே பாஜக உடனான கூட்டணி முறிந்தது.  எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது. பாஜக உடனான கூட்டணியை முறிப்பதே அதிமுக தொண்டர்களின் ஒட்டுமொத்த உணர்வு எனவும் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.