2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதியை மையமாக வைத்து அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது.
கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரைத் தங்களுக்குச் செல்வாக்கு அதிகம் இருப்பதால், சிங்காநல்லூர் தொகுதியைத் தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பிடிவாதமாக இருந்தனர்.
ஆனால், “சிங்காநல்லூர் அதிமுகவின் கோட்டை, அங்கே மற்றவர்களுக்கு இடமில்லை” என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கறாராக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த அண்ணாமலை ஆதரவாளர்கள், கூட்டணியில் உரிய மரியாதை இல்லை எனப் புலம்பி வருகின்றனர்.
ஏற்கனவே சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வலுவாக இருப்பதால், அதை விட்டுக் கொடுக்க இபிஎஸ் தயாராக இல்லை. இந்தத் தொகுதிப் போர், கோவை மாவட்ட அரசியலில் அதிமுக – பாஜக கூட்டணியின் வெற்றியைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
