தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காரசாரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கப் போவதாகக் கூறும் அரசு, பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் காலந்தாழ்த்துவது ஏன் என அவர் சாடியுள்ளார்.
“ஆசிரியர்களே இல்லாத வகுப்பறையில் மாணவர்கள் எப்படிப் பாடங்களைக் கற்க முடியும்? முதல்வர் அவர்களே.. ஆசிரியர்களை நியமிக்காமல் தேவா, ஜீவா போன்ற ஏழை மாணவர்கள் எப்படி முன்னேறுவார்கள்?” என்று அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கிராமப்புற மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாகவும், இனியும் தாமதிக்காமல் உடனடியாகத் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அன்புமணியின் இந்த “தேவா, ஜீவா” பாணி கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
