தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் உள்ளது. அதன்படி “திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கடன் 2 மடங்காக அதிகரித்துள்ளது..” “2021ல் ரூ.5லட்சம் கோடியாக இருந்த கடன் 2026ல் ரூ.10லட்சம் கோடியாகியுள்ளது..” “கொரோனா தொற்று காலத்தை விட திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகம்..”
“திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி..”
“ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக வருவாய் கொண்ட மாநிலமாக இருந்தது தமிழ்நாடு..”
“திமுக ஆட்சியில் நாட்டின் சராசரியை விட தமிழ்நாட்டின் வருவாய் குறைந்துவிட்டது..”
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி.. 2021ல் ரூ.46538 கோடியாக இருந்த வருவாய்பற்றாக்குறை 2026ல் ரூ.78,324 கோடி..
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது..
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச் செலவினம் குறைந்துள்ளது..
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் வட்டிச் செலவீனம் 22.8 சதவீதம்..
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதம்..
தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி..
