பாஜகவில் 261 ரவுடிகள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியல் எனது கையில் உள்ளது. 32 பக்கங்கள் கொண்ட இந்த பட்டியலில் உள்ள ரவுடிகள் அனைவரும் பாஜகவில் உள்ளனர். அனைத்து ரவுடிகளையும் கட்சியில் வைத்துக்கொண்டு பாஜகவினர் சட்டம் ஒழுங்கு குறித்து பேசலாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.