மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு நட்சத்திர விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்டோரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாடகி அனுராதா படுவால் பாஜகவில் இணைந்துள்ளார். பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அனுராதா அவரது தலைமையின் கீழ் பணி புரிவது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.