இந்தியாவில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 500 கோடி மதிப்பிலான மின்சார போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் 2024 என்பதை அமல்படுத்த உள்ளது. வாகனத்தின் விலை குறைந்தால் விற்பனை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை என மூன்று லட்சம் இரு சக்கர வாகனங்களுக்கு உதவி வழங்குவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அதனைப் போலவே சிறிய மூன்று சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் வரையும் பெரிய மூன்று சக்கர வாகனம் வாங்கும் போது 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.