கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 17 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தை மற்றும் சொந்தச் சகோதரியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  அதாவது  தந்தை, மகள் மற்றும் சிறுவனுக்கு இடையே திடீரென கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தனது தந்தை மற்றும் சகோதரியை ஓட ஓட விரட்டி சரமாரியாகக் குத்தியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலின் போது ஏற்பட்ட மோதலில், அந்தச் சிறுவனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிறுவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே கொலையைச் செய்யும் அளவிற்கு ஏற்பட்ட அந்தப் பூர்விகப் பகை அல்லது குடும்பப் பிரச்சினை என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.