ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் (BBL 2025-26) தொடரில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் இடையே நடந்த குறும்புத்தனம் ரசிகர்களை நெகிழ வைத்தது.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது, 3-வது ஓவர் முடிவில் ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. மைதானத்தை கடந்து சென்ற ஹாரிஸ் ரவுஃப், எதிரணி வீரர் ஃபின் ஆலனைத் தோள்பட்டையால் பலமாகத் தள்ளினார். ஒரு நிமிடம் மைதானமே அதிர்ச்சியில் உறைந்தது. பெரும் மோதல் வெடிக்கப்போகிறது என ரசிகர்கள் நினைத்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். அது வெறும் நட்பு ரீதியான கேலிதான் என்பதை உணர்ந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் இருவரும் கைகுலுக்கி தங்கள் நட்பை வெளிப்படுத்தினர்.
ஆரம்பத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் அனல் பறந்தது. தனது அபாரமான வேகத்தால் பெர்த் அணியின் டாப் ஆர்டர் வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தினார். ரவுஃப் வீசிய எகிறிய பந்தில் (Bouncer) மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் வெளியேறினார்.
அதே ஓவரில் ஹில்டன் கார்ட்ரைட்டிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவுஃப்பின் வேகத்தில் நிலைகுலைந்த இங்கிலிஸ் 1 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.
“Hang on!”
All’s well that ends well between Haris Rauf and Finn Allen. #BBL15 pic.twitter.com/wVCAFnQJFm
— KFC Big Bash League (@BBL) January 17, 2026
ரவுஃப்பின் வேகத்தால் பெர்த் அணி தடுமாறினாலும், பின்னர் இணைந்த ஃபின் ஆலன் மற்றும் ஆரோன் ஹார்டி ஜோடி அணியை மீட்டது.
ஃபின் ஆலன்: 39 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.
ஆரோன் ஹார்டி: 41 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 131 ரன்கள் என்ற எளிய இலக்கை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கடந்து அபார வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்குப் பின்னடைவாக இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியுடன் இணைந்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
