பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கை செயற்பாட்டாளர் ஹினா பலோச் பாகிஸ்தானின் பாலியல் தேர்வுகள் குறித்து சமீபத்தில் வெளியிட்ட கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஆண்களில் 80 சதவீதம் பேர் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றும், மீதமுள்ள 20 சதவீதம் பேர் இருபால் ஈர்ப்பு கொண்டவர்கள் என்றும் அவர் ஒரு நேர்காணலில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூகக் கட்டுப்பாடு, மத ரீதியான அழுத்தங்கள் மற்றும் குடும்ப கௌரவம் காரணமாக பாகிஸ்தானில் எவரும் தங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்வதில்லை என்றும், இது அந்த நாட்டின் ஒரு ‘மறைக்கப்பட்ட ரகசியம்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த ஹினா பலோச், பாகிஸ்தானில் உண்மையில் ‘நேரான’ பாலியல் ஈர்ப்பு கொண்ட ஆண்களே இல்லை என்று கூறியுள்ளார். பகல் நேரங்களில் திருநங்கைகளை ஏளனம் செய்யும் நபர்களே, இரவு நேரங்களில் தங்களின் பாலியல் தேவைகளுக்காக அவர்களைத் தேடி வருவதாக அவர் ஒரு வேதனையான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் நிலவும் ஆணாதிக்கச் சூழலையும், அங்குள்ள மக்களின் இரட்டை மனப்போக்கையும் விமர்சித்துள்ள இவரது இந்த வீடியோ, தற்போது சர்வதேச அளவில் வைரலாகி பல தரப்பினரிடையே விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
