தமிழ் சினிமாவில் பெண் இயக்குனராக திகழ்ந்த பிரபல இயக்குனர் மற்றும் நடிகை ஜெயதேவி இன்று காலமானார். நடன கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஜெயதேவி தமிழில் ஜெமினி கணேசன் நடிப்பில் 1976 ஆம் ஆண்டு வெளியான இதயமலர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து ஜெயசங்கர் உடன் வாழ நினைத்தால் வாழலாம், ரஜினியுடன் காயத்ரி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு மற்றும் மற்றவை நேரில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக இதயம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இவர் தன்னுடைய 65 வயதில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.