கர்நாடகாவில் பெலகாவியாவில் உள்ள சட்டப்பேரவையில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பள்ளிகளில் சானிட்டரி நேப்கின் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது 2024 ஆம் வருடம் ஜனவரி முதல் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரத்துக்கான ஹூச்சி  என்ற திட்டத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், பல காரணங்களால் இந்த திட்டம் கடந்த 3 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 40 கோடி தேவை. இதற்கு முன்பாக பள்ளிகளில் மாவட்ட சுகாதார அலுவலகம் மூலமாக நேப்கின்கள் விநியோகம் செய்யப்பட்டது. இப்பொழுது டெண்டர் எடுக்கும் ஏஜென்சிகள் மூலமாக அவற்றை நேரடியாக பள்ளிகளுக்கு வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.