இந்தியாவில் வங்கி சேமிப்புகளை விட மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் தபால் நிலையங்களில் பல சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது தபால் நிலைய வைப்பு நிதி திட்டங்களுக்கான விதிமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 10 ஆம் தேதி அல்லது அதன் பிறகு தொடங்கப்பட்ட வைப்பு நிதி திட்டங்களுக்கான விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

நவம்பர் ஒன்பதாம் தேதி வரை இருந்த கணக்குகளுக்கான விதிமுறைகள் முந்தைய அறிவிப்பின்படி தொடரும் எனவும் புதிய விதிமுறைகளின் படி ஐந்து ஆண்டு வைப்புத் தொகை திட்டத்தில் நான்கு ஆண்டு முடிவடைவதற்கு முன்பு தொகையை திரும்ப பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டு வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கி ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு இடையில் பணத்தை திரும்ப பெற்றால் சேமிப்பு காலத்திற்கான டெபாசிட் தொகைக்கு அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் வட்டி வழங்கப்படும் எனவும் புதிய விதிமுறைகள் மூலமாக மக்கள் வைப்பு தொகையை திரும்பப் பெறும விகிதம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது