இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல மாநிலங்களிலும் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இன்டர் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. ஒண்டிப்புடா பள்ளிகள் இன்னும் பத்து நாட்களில் கட்டி முடிக்கப்படும் எனவும் இந்த ஆண்டு கோடை விடுமுறை முன்னதாக விட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி வரை தேர்வுகள் இருக்கும்.

அதன் பிறகு மூன்று நாட்களில் பெற்றோர் சந்திப்பு இருக்கும் எனவும் ஏப்ரல் 30-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் ஜூன் 12-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் பள்ளிகளுக்கு சுமார் 45 நாட்கள் கோடை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.