திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அங்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தினசரி பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கையை கருதி கூடுதலாகவும் லட்டுக்கள் தயாரிக்கப்பட்ட விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அறங்காவலர் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இந்த லட்டு பிரசாதத்தை இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் திருப்பதி லட்டு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் என தெரிகிறது.