நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய் இந்தமுறை அரசியல் குதித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, மதுரை அல்லது கோவையில் பிரமாண்டமான மாநாட்டை நடத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்கும் அவர், கட்சி நிலைபாடு, கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். மேலும், 2026 தேர்தலில் தனித்து போட்டியிடவும், திருச்சி & நெல்லையில் அவர் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளாராம்.