ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் எல்லையோர மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்லையில் சோதனை சாவடிகள் அமைப்பது, சிறப்பு சுகாதார முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. ஆந்திராவில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.