தமிழகத்தில், வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இவர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானதிலிருந்து 7 மாதங்களாக தொகை வரவில்லை என குற்றசாட்டு எழுந்தது.

இந்நிலையில் தற்போது இந்த மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட உடனே, அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் உதவித்தொகை வந்து சேரும் என நம்பப்படுகிறது.