“தமிழக வெற்றி கழகம்” என்று வைத்திருந்த கட்சியின் பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என்று விஜய் அதிகாரப்பூர்வமாக மாற்றியிருக்கிறார். இலக்கண முறைப்படி நிலைமொழியான வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான ‘க்’ வர வேண்டும். இதனை பலர் சுட்டிக் காட்டிய நிலையில் X பக்கத்தில் மாற்றங்களை செய்திருக்கிறார் விஜய். இனி அக்கட்சி “தமிழக வெற்றிக் கழகம்” என்றே அழைக்கப்படும்.