சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராமர் சேது பாலத்தில், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்ய முயன்ற சிறுமியை இளைஞர்களின் விழிப்புணர்வு செயலால் உயிருடன் மீட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலாஸ்பூரில் உள்ள போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வந்த தகத்பூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுமி, நர்சிங் கல்லூரி சேர்க்கையில் தேர்ச்சி பெற முடியாததால் மனவேதனைக்குள்ளாகி, சனிக்கிழமை இரவு ராமர் சேது பாலத்திற்கு சென்று  அந்தப் பெண், பாலத்தின் தடுப்புச்சுவரில் ஏறி ஆற்றில் குதிப்பதற்காக முயன்ற போது, அங்கிருந்து செல்லும் பொதுமக்கள் உடனடியாக அதை கவனித்து, பேச்சுவார்த்தை  மூலம் மனதை மாற்ற முயற்சி செய்தனர்.

“>

இதற்கிடையில், ஆக்டிவா வாகனத்தில் வந்த ஒரு இளைஞர், தனது வாகனத்தை நிறுத்தி, அந்தப் பெண்ணை பின்னால் இருந்து பிடித்து பாதுகாப்பாக கீழே இறக்கினார். பின்னர் அவர், அந்த சிறுமியை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.  தற்போது அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.