கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் குறித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“தமிழ்நாட்டில் இனி இதுபோன்ற துயரச்சம்பவங்கள் நடக்கக்கூடாது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பது எங்கள் மனப்பூர்வமான பிரார்த்தனை” என அவர் கூறினார். மேலும், “தமிழ்நாட்டில் பெரிய கூட்டங்களை கட்டுப்படுத்தும் திறன் இன்னும் சரியாக இல்லாதது வருத்தத்துக்குரியது” எனவும் குறிப்பிட்டார்.

அண்ணாமலை தொடர்ந்து, “எங்கள் முதல் குற்றச்சாட்டு அரசு மீதேயாகும். இந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (SP) மீது உடனடி நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும். சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாக அலட்சியத்தின் விளைவாக ஏற்பட்டது என்றும், எதிர்காலத்தில் இத்தகைய துயரங்கள் மறுபடியும் நடைபெறாத வகையில் அரசு திடமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.