கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக, முழு  பொறுப்பு திமுக அரசுக்கு உண்டு என  கிருஷ்ணசாமி கடும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூரில் நடந்தது சாதாரண விபத்து அல்ல; திமுக அரசு திட்டமிட்ட படுகொலை செய்துள்ளது” எனவும், “விஜய்க்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்திலும், அவர் சிறப்பாக பிரசாரம் செய்யக்கூடாது என்ற எண்ணத்திலும் போலீசார் வேலுச்சாமிபுரத்தில் தேவையற்ற கட்டுப்பாடுகளை திணித்துள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

“>

 

மேலும், 2026-ல் திமுகவுக்கு எதிராக ஒரு புதிய சக்தி உருவாகி விடக்கூடாது என்பதற்காக கூட்டத்தை சீர்குலைத்துள்ளனர் என அவர் கடுமையாக சாடியுள்ளார். “விஜயின் கூட்டங்களில் அதிக மக்கள் வருவதை பார்த்து பயந்த அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாமல் மக்கள் உயிரைக் காவு கொண்டுள்ளது” என்று கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி,

இந்த சம்பவத்திற்கு நீதிமன்ற விசாரணை நடத்தி,காரணமானவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.