இந்திய பாதுகாப்புப்படை தலைமை தளபதி அனில் சவுகான் டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஆண்டின் அனைத்துநாள்களிலும், 24 மணி நேரமும் இந்திய ராணுவம் மிகுந்த தயார் நிலையில் இருக்க வேண்டும். நவீன போர்த்தொழில்நுட்ப சூழலில் எதிர்கால ராணுவ வீரர்களுக்கு தகவல், தொழில்நுட்பம் மற்றும் அறிவு மூன்றும் முக்கியமானவை. இவை இல்லாமல் எதிரிகளுக்கு எதிராக நம்மை நிலைநிறுத்த முடியாது” எனத் தெரிவித்தார்.
மேலும், “ஒரு போர் என்றாலே அதில் இரண்டாம் இடம் எனும் ஒரு பரிகாசம் கிடையாது. வெற்றி பெறும் ராணுவமே பிழைக்கும். எனவே, எந்த ராணுவமும் எப்போதும் விழிப்புடன், செயல்பாட்டுத் தயார் நிலையில் இருக்க வேண்டும். தொடர்ந்து செயல்படக்கூடிய ராணுவ ஆயத்த நிலையை பராமரிப்பதே நமது முக்கியமான கடமையாகும்” என்றும் அவர் வலியுறுத்தினார். அவரது உரை ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
