உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் சிம்பாவலி பகுதியில் உள்ள சஃபாரி ஹோட்டலில், டேனிஷ் என்ற இளைஞர் தனது காதலியுடன் ஹோட்டலில் தங்கியிருந்தார். மாலை வரை வீட்டிற்கு திரும்பாத அந்தப் பெண்ணைத் தேடி, அவரது குடும்பத்தினர் நேரடியாக ஹோட்டலுக்கு வந்து, அறையின் சாவியை பெற்று கதவைத் திறந்துள்ளனர்.
அதை பார்த்த டேனிஷ், உடை அணியாமல் அறையிலிருந்து ஓடிவிட்டார். சுமார் ஒரு கிலோமீட்டர் வரை நிர்வாணமாக சாலையில் ஓடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், அந்தப் பெண் நள்ளிரவில் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில், டேனிஷ் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி நம்பவைத்ததாகவும், ஹோட்டலுக்கு அழைத்து சென்று தகாத உறவுக்கு முயற்சி செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
UP: हापुड़ में एक महिला रहनुमा अपने प्रेमी दानिश संग होटल में आपत्तिजनक हालत में पकड़ी गई, पति अल्कान ने छापा मारा
◆ सिंभावली के होटल सफारी से दानिश नग्न हालत में भागा
◆ वीडियो हुआ वायरल, पुलिस ने शिकायत पर जांच शुरू की#Hapur | Wife Caught | #CheatingExposed pic.twitter.com/r9UTD078h0
— News24 (@news24tvchannel) July 25, 2025
“>
மேலும், ஆடைகளை அகழச்செய்து வீடியோ பதிவு செய்து, மிரட்டியதாகவும், வற்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சிம்பாவலி போலீசார் டேனிஷ் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் ஹாபூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல்களில் தனிப்பட்ட முறையில் தங்கும் இளைஞர்கள் மீது கண்காணிப்பு தேவையெனவும், உரிய பதிவுகள் இல்லாமல் அறைகள் வழங்கப்படும் சூழ்நிலைகள் மீதான கவனமும் முக்கியம் எனவும் சமூகத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.போலீசார் அந்த வீடியோ மற்றும் ஹோட்டல் பதிவுகளை ஆய்வு செய்து, டேனிஷை விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
