ஹரியானா மாநிலத்தில் ஒருவர் கார் ஓட்டி பழகியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கார் சாலையோரம் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நபர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.