திருமணமாகாத ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றாக சேர்ந்து விடுதி அறைகளில் தங்க முடியாத வகையில் OYO நிறுவனம் விதிகளை மாற்றியது. முதற்கட்டமாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் அந்த விதிகள் அமல்படுத்தப்பட்டது. நாட்டின் பிற நகரங்களிலும் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.