நமது அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் சாதாரணமாகப் பார்க்கும் ஒரு மிகச்சிறிய உயிரினம்தான் எறும்பு. எறும்புகள் மிகவும் சிறியதாக இருப்பதால், அவற்றின் முக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை நம்மில் பெரும்பாலானோர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நமக்குத் தெரியாத அந்த எறும்பின் முக அமைப்பை அப்படியே அச்சு அசல் அப்பட்டமாகத் தெரியப்படுத்தும் விதமாக, இணையத்தில் வெளியான அரிய காணொளி ஒன்று தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக வேகமாக வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்தக் காணொளியில், நபர் ஒருவர் எறும்பின் தலையை அதிநவீன கேமரா மூலம் மிக க்ளோசப்பில் (Microscopic Close-up) படம் பிடித்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எறும்பின் முகம் ஏதோ ஹாலிவுட் படங்களில் வரும் கற்பனை ராட்சச விலங்கு போல மிக பயங்கரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த வியக்கத்தக்கக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “நல்லவேளை எறும்பு அளவில் இவ்வளவு குட்டியாக இருக்கிறது, ஒருவேளை இது மட்டும் பெரிதாக இருந்திருந்தால் மனிதர்களின் கதி என்னவாகி இருக்கும்?” என்று தங்களது வியப்பையும் பயத்தையும் கமெண்ட்டுகளாகப் பதிவிட்டு வருகின்றனர்.
