உக்ரைன் மற்றும் ரஷ்யா நடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் ரஷ்யா உக்ரைன் நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் அங்கு வேலை பார்த்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் கேரள வாலிபர் ஒருவர் உக்ரைன் நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. ஆங்கில ஆசிரியரான விநாயகர் மூர்த்தி கடந்த 2021-ஆம் ஆண்டு உக்ரைனில் யூலியா கிளிப் என்ற பெண்ணை சந்தித்தார். முதலில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். அதன் பிறகு நட்பு காதலாக மாறியது. ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வந்த நிலையில் இருவரும் காதலித்தனர்.

ஒருநாள் யூலியாவின் குடும்பத்தினருடன் விநாயகமூர்த்தி இரவு நேரம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் விமான நிலையத்தில் ரஷ்யா குண்டு வீச்சு நடத்தியது. இதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறி தொலைதூர கிராமத்திற்கு சென்றனர்.

சில நாட்களுக்கு அங்குள்ள அணுமின் நிலையத்தை ரஷ்யா வெடிக்க செய்யப் போகிறது என்ற வதந்தி பரவிய நிலையில் விநாயகமூர்த்தி தனது காதலியின் குடும்பத்துடன் போலந்துக்கு சென்று விட்டார். பல இன்னல்களை சந்தித்து கேரளாவிற்கு திரும்பிய விநாயகமூர்த்தி கடந்த 2024-ஆம் ஆண்டு காதலியை திருமணம் செய்ய நினைத்தார்.

அதற்குள் பல சட்ட சிக்கல்கள் வந்தது. அதனை சரி செய்து தற்போது விநாயகமூர்த்தி தனது காதலி யூலியாவை திருமணம் செய்துள்ளார். பாரம்பரிய முறைப்படி கேரளாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. யூலியா வருகிற 23-ஆம் தேதி ஜெர்மனிக்கு செல்ல உள்ளார். அவரை தொடர்ந்து விநாயகமூர்த்தியும் வேலைக்காக உஸ்பெகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.