ஜம்மு காஷ்மீர் பகல் காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பறிபோனது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் ஹீரோ முரளியின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட உள்ளது. முரளி நாயக் கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் கெளதம் கிருஷ்ணா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுரேஷ் பாபு தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா அளவில் உருவாக உள்ளது. நேற்று இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் கௌதம் கிருஷ்ணா பல கருத்துக்களை கூறினார்.

நம் நாட்டு மக்களுக்காக வீர மரணம் அடைந்த முரளி நாயக்கின் கதையை உலகிற்கு சொல்வதற்காக படம் தயாரிக்கப்படுகிறது. இது நாட்டையே பெருமைப்படுத்தும் படமாக இருக்கும் எனவும், முரளி நாயக் கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்கு அதிர்ஷ்டம் எனவும் கௌதம் கிருஷ்ணா கூறியுள்ளார்.