தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், தனது முதல் மேடைப் பேச்சிலேயே சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தான் மிகவும் ‘ஸ்ட்ரிக்ட்’ ஆக இருக்கப்போவதாகக் கொடுத்த எச்சரிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே செயலாக மாறத் தொடங்கியுள்ளது.

அதன் அதிரடித் தொடக்கமாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் (History Sheeters) அனைவரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

“பழைய பகையை மறந்துவிட்டு, கிரிமினல் பாதையை விட்டு விலகி உங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ளுங்கள்; இல்லையென்றால் காவல்துறையின் நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும்” என்று எஸ்.பி. அவர்களுக்குக் கறாராக அறிவுரை வழங்கினார்.

“>

 

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு காவல்துறையினர் எடுத்துள்ள இந்த உடனடி ‘ஆக்‌ஷன்’, ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில், பொதுமக்களிடையே “விஜய் சொன்னபடியே ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு” என்ற பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.