தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 28 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக-விற்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி தொகுதி மட்டுமே ஒரு ஆறுதல் வெற்றியைத் தேடித்தந்துள்ளது. அங்கு தவெக வேட்பாளருடன் நடந்த கடும் போட்டியில், வெறும் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் நூலிழையில் வெற்றி பெற்றுள்ளார். ஒருவேளை இந்தத் தொகுதியும் கை நழுவியிருந்தால், தமிழக சட்டசபையில் பாஜக-விற்குப் பிரதிநிதித்துவமே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

​ஆனால், மற்ற 27 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பல தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாமல் அந்தக் கட்சி திணறியுள்ளது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்து ‘மாற்று சக்தி’ எனப் பேசப்பட்ட பாஜக, இந்த முறை பல தொகுதிகளில் 3-வது அல்லது 4-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்தும் மோடி மேஜிக் எடுபடவில்லை என்பது தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.