தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளளார் விஜய். மேலும் சுமார் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சமூக ஊடகங்களில் தனிப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவருவதற்காக சமூக வலைதள பக்கங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், அரசியல் கட்சிக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கும் பணியிலும் விஜய் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசியல் என்பது பொதுவழி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ண விரும்பவில்லை ‘விமர்சனம்’, நான் கடவுளிடம்| கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு ‘விமோச்சனம்” என நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி தொடர்பான கேள்விக்கு இயக்குநர் டி.ராஜேந்திரன் ‘நச்’ பதில் அளித்துள்ளார்