சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு பணி நிரந்தரம் செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெரினா மற்றும் பிராட்வே பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள், இன்று தேனாம்பேட்டையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்ய முயன்றனர். குறிப்பாக, பெண் பணியாளர்கள் சிலர் தங்களைக் கைது செய்ய விடாமல் தடுப்பதற்காக போலீஸ் வாகனத்தின் அடியில் படுத்து மறியலில் ஈடுபட்டது அங்கிருந்தோரை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.