தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். இவர் திராவிட இயக்கத்தின் ஆதரவாளராக திகழும் நிலையில் இவரது மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் திமுகவின் இணைந்த நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிடவும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வந்ததிலிருந்தே நடிகர் விஜயை விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் மக்களுக்காக என்ன செய்துள்ளார் என்று கேட்ட நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வரவில்லை 25 வருடங்களாகவே மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது ரசிகர்கள் வீடியோ வெளியிட்டனர்.

குறிப்பாக அவரது சகோதரர் சிபி சத்யராஜ் கூட தனது சகோதரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் திவ்யா சத்யராஜ் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் சமீபத்தில் விஜய் என்ன செய்தார் என்று கேட்டதற்கு அவரது ரசிகர்கள் எனக்கு வீடியோவை வெளியிட்டு காட்டினார்கள். மக்களுக்கு பணம் கொடுப்பது மட்டும் உதவி கிடையாது. காமராஜர் மற்றும் சமீபத்தில் மறைந்த நல்ல கண்ணு ஆகியோர் மக்கள் நலப் பணிகளை எப்படி ஈடுபட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

பொதுவாக மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கு தகுந்தவாறு அதனை சரி செய்வதே உண்மையான மக்கள் நலப்பணி. பணம் கொடுப்பது மட்டும் மக்கள் நல பணி கிடையாது. பொதுவாக ஒருவரின் பிரச்சினை தெரிந்த பின் அவரது வீட்டிற்கு சென்று காபி குடிச்சுக்கிட்டே அவர்களிடம் பேசினால் தான் மக்களோடு மக்களாக இருப்பது போன்று தோன்றும் அப்போதுதான் அவர்களது பிரச்சனைகளும் தெரியவரும்.

மேலும் I hope you understand bro thank you bro என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.