ஒரு உணவகத்தில் உணவு பரிமாற வந்த ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் மிக மோசமாக நடத்தியுள்ளார். அந்த ஊழியரை அவமதிக்கும் வகையில், உணவிற்கான பணத்தை தரையில் வீசி எறிந்து தனது கோபத்தைக் காட்டியுள்ளார். வாடிக்கையாளரின் இந்த அநாகரீகமான செயலால் அந்த ஊழியர் மனவேதனை அடைந்தார். இதைக்கண்ட உணவக மேனேஜர் உடனடியாகத் தலையிட்டு, அந்த வாடிக்கையாளருக்குப் பாடம் புகட்டினார்.
🚨⚡️One of the restaurant's customers insulted one of the employees who had begun serving him food, to the point of throwing the money on the ground.
But here, the restaurant manager intervened and responded to the customer with an appropriate reply that made everyone in the… pic.twitter.com/wqBklvT8nX
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) December 25, 2025
தரையில் வீசப்பட்ட பணத்தை அந்த வாடிக்கையாளரையே மீண்டும் எடுக்கச் சொன்னதோடு, அவரை உணவகத்தை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டார். மேனேஜரின் இந்தத் துணிச்சலான செயலையும், ஊழியருக்கு ஆதரவாக நின்ற குணத்தையும் பார்த்த அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.
