உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ராமதீன் சிங் மார்க்கெட் அருகே, மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து இளைஞர் ஒருவர் உயிருக்குத் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காற்றில் பறந்து வந்த பட்டம் விடும் மாஞ்சா நூல் அந்த இளைஞரின் கழுத்தைச் சுற்றியது. அந்த நூல் எவ்வளவு கூர்மையானது என்றால், மரக் கிளைகளையே அறுக்கும் தன்மை கொண்டது.

​நூலிழையில் அந்த இளைஞரின் கழுத்து நரம்பு அறுக்கப்பட இருந்த நிலையில், அங்கிருந்த ஒரு பெண்ணும் மற்றொரு நபரும் உடனடியாகச் செயல்பட்டு நூலை அகற்றி அவரை மீட்டனர். அவர்களின் சமயோசித செயலால் ஒரு பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. “கொலைகார மாஞ்சா” என்று அழைக்கப்படும் இத்தகைய கூர்மையான நூல்கள் பயன்பாட்டிற்குப் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இப்போதும் இத்தகைய விபத்துகள் தொடர்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.