இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா பகுதியில் குரங்கு ஒன்று துப்பட்டாவை வைத்துக்கொண்டு செய்த சேட்டை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. எங்கிருந்தோ ஒரு வண்ணமயமான துப்பட்டாவைக் கைப்பற்றிய அந்த குரங்கு, அதை வெறும் துணியாகப் பார்க்காமல் ஒரு ஆடை போலப் பயன்படுத்தி விளையாடியுள்ளது. சில நேரங்களில் அந்தத் துப்பட்டாவைத் தலையில் முக்காடு போலப் போட்டுக்கொண்டு ஒரு புதுப்பெண் போல வெட்கப்படுவதும், அடுத்த நிமிடம் ஒரு மாடல் அழகி போலச் சுவரில் நடந்து வருவதும் பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்துள்ளது.
கீதாஞ்ச் சௌத்ரி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை இதுவரை சுமார் 6 கோடி பேர் பார்த்துள்ளனர். 49 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். வழக்கமாகச் சிம்லாவில் குரங்குகள் செய்யும் அட்டகாசம் மக்களைப் பயமுறுத்தும், ஆனால் இந்தத் ‘துப்பட்டா திருடன்’ செய்த கியூட்டான செயல் அனைவரின் இதயத்தையும் வென்றுள்ளது. “இது ரொம்பவே அழகாக இருக்கிறது” என்றும், “யாரோ பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது போல முக்காடு போட்டுள்ளது” என்றும் இணையதளவாசிகள் ஜாலியாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
