ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 4-வது மாடியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது புடவை தவறி 3-வது மாடி பால்கனியில் விழுந்ததற்காகச் செய்த காரியம் அனைவரையும் உறைய வைத்துள்ளது. கீழே விழுந்த புடவையை எடுப்பதற்காக, தனது சிறு மகனை ஒரு புடவையால் கட்டி, 4-வது மாடியில் இருந்து 3-வது மாடிக்கு ஆபத்தான முறையில் இறக்கியுள்ளார்.
SHOCKER 🚨 A woman tied her son with a saree and lowered him from the 4th floor to the 3rd.
She lowered him from the 4th floor to the 3rd just to retrieve her saree 🤡 pic.twitter.com/wM4AYtKoAk
— News Algebra (@NewsAlgebraIND) February 23, 2026
அந்தச் சிறுவன் கீழே விழுந்தால் என்ன ஆகும் என்ற துளிகூட அச்சமின்றி அந்தத் தாய் செய்த இந்தச் செயல் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவன் புடவையை எடுத்துக்கொண்டு மீண்டும் மேலே இழுக்கப்பட்டாலும், அந்தச் சில நிமிடங்கள் அவன் மரணத்தின் விளிம்பிற்கே சென்று வந்ததாக மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
