காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே காதல் தகராறில் ஒருவர் இளம்பெணை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ரீபெரும்புத்தூர் அருகே வசித்து வந்த 21 வயதான சௌந்தர்யா என்ற இளம்பெண், தினேஷ் என்பவருடன் கடந்த சில மாதங்களாக காதலாகப் பழகி வந்தார். ஆனால், சௌந்தர்யா தனது ஆண் நண்பர்களுடன் அதிகம் பேசுவதை தினேஷ் விரும்பவில்லை என்றும், இதற்காக அவர் பலமுறை எச்சரித்தும், சௌந்தர்யா கேட்காமல் பேசியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் கடும் கோபமடைந்த தினேஷ்,  சந்தர்ப்பம் பார்த்து சௌந்தர்யாவை கத்தியால்  பலமுறை குத்தி கொலை செய்துவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தெரிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சௌந்தர்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காதலன் தினேஷை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.