ரீல்ஸ் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு லைக்ஸ் வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இளம் வயதினர் முதல் மூத்தவர்கள் வரை சோசியல் மீடியா தளங்களை உபயோகப்படுத்துகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவு செய்வதில் இரண்டு பெண்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் திருச்சியை சேர்ந்த மலர் என்ற பெண் நெமிலியை சேர்ந்த கிருஷ்ணவேணியை பழிவாங்க நினைத்தார்.
இதற்காக கிருஷ்ணவேணியின் புகைப்படத்தை தனது ஆண் நண்பர் ராஜாவுடன் இருப்பது போல மார்ஃபிங் செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். இதற்கு ராஜாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மலர் மற்றும் ராஜா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
