மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, கோவையில் தி.மு.க.வினர் மேற்கொண்ட நூதனப் போராட்டத்தின் சுவாரஸ்யத் தகவல்கள் இதோ,

கோவை ராஜவீதியில் தி.மு.க. சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு தி.மு.க.வினர் இலவசமாக முட்டைகளை வழங்கினர். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி வெறும் “முட்டை” என்பதைச் சுட்டிக்காட்டவே இந்த ஏற்பாடு என அவர்கள் தெரிவித்தனர்.

வெறுமனே முட்டை மட்டும் வழங்காமல், அங்கேயே முட்டை போண்டா போட்டு பொதுமக்களுக்குச் சாப்பிடக் கொடுத்து அசத்தினர். இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கடலூர் புகழேந்தி, கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சிறு, குறு தொழில்துறையினர் படும் கஷ்டங்களை டெல்லிக்குச் சென்று தெரிவிக்காமல் மக்களை ஏமாற்றி வருவதாகச் சாடினார்.