சமூக வலைத்தளங்களில் ஒரு காதல் ஜோடி தங்களது படுக்கையறையில் அமர்ந்தபடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் இளம்பெண், “என் பெயர் அர்ச்சனா குமாரி. என் தந்தையின் பெயர் சட்டு பாஸ்வான். பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளோம்.

எனது கணவரின் குடும்பத்தினரை எனது பெற்றோர் தேவையின்றி வற்புறுத்தி, துன்புறுத்தி வருகின்றனர். ஒருவேளை அவரது குடும்பத்தினருக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு எனது தாய் மற்றும் தந்தை தான் முழு பொறுப்பு” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீடியோவின் இறுதியில் தனது மைத்துனர் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

நெற்றியில் குங்குமத்தோடு அந்தப் பெண் காதலனுடன் இருக்கும் கோலத்தைப் பார்த்தால், அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டது தெளிவாகத் தெரிகிறது. பெண்ணின் வீட்டார் காதலனின் குடும்பத்திற்குத் தொல்லை கொடுப்பதாலேயே இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு பயனர், “இப்படிப்பட்ட பெண்களின் அவசரமான முடிவுகளால் தான், மற்ற பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பி படிக்க வைக்கப் பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்” என்று ஆதங்கத்தோடு கமெண்ட் செய்துள்ளார். பெற்றோரின் வளர்ப்பையும், பாசத்தையும் மறந்து இளமைப் பருவக் காதலுக்காக வீட்டை விட்டு ஓடிவரும் இத்தகைய சம்பவங்கள், சமூகத்தில் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் அவமானத்தை இந்தத் தலைமுறையினர் உணர்வதில்லை என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.